வரப்போகும் தேர்தல் வெற்றி, தோல்விகள் இந்திய கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தப்போகிறதாம். காரணம் விலைவாசி உயர்வு, பொருளாதார சீர்கேடு, இந்திய பாதுகாப்பு, இலங்கை பிரச்சனை, அமெரிக்கா, சீனா உறவு போன்றவை அடுத்த ஆட்சியாளர்களை கவலையில் ஆழ்த்தும் நிலைக்கு கொண்டு வரும் என்கிறார்கள். பொருளாதார நிபுணர்களாக வெளிக்காட்டிய மன்மோகன்சிங், தமிழக சிதம்பரம், முன்னாள் கவர்னர் ரங்கராஜன் போன்றவர்கள் இன்றைய பொருளாதார சீர்கேட்டை உயர்த்த வழிதெரியாமல் தவிக்கிறார்கள். பா.ஜ.க.வில் முன்னாள் நிதிஅமைச்சர் யஷ்வந்த்சின்கா, ஜஸ்வந்த்சிங் போன்றவர்கள் தற்போதைய பொருளாதார நிலை உயர்வுக்கு வழிகாட்டுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உற்பத்திதிறன் இந்தியாவில் குறைந்துவிட்டது. அல்லது வேண்டுமென்றே குறைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். இந்திய பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக மதிப்பு இருந்தாலும் பா.ஜ.க., காங்கிரஸ் அரசியல்வாதிகள் அதனை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தரக்குறைவானதும், விலையில் குறைந்ததுததான சீனா, ஜப்பானிய பொருட்களை இந்தக் கட்சிகள் அதிகம் ஊக்குவித்தன என்ற குற்றச்சாட்டு, இந்திய தொழில் அதிபர்களிடம் எழுந்துள்ளதாம்.
அமெரிக்க, சீனா நாடுகளுடன் இந்தியா மண்டியிட்டு கெஞ்சும் நிலைக்கு இந்திய அரசியல்வாதிகள் ஏற்படுத்தி உள்ளார்கள். இந்திய தூதர் தேவயானி பிரச்னை குறித்து கொதித்து எழுந்து நாடகமாடிய இந்திய அரசியல்வாதிகள், தங்கள் எதிர்காலத்தை எண்ணி அமெரிக்காவிற்கு சலாமடிக்கத்தயாராக இருக்கிறார்கள் என்பது உண்மையானது என்கிறார்கள். அமெரிக்காவை காட்டி இந்திய இளம் தலைமுறையை அழித்த பாவத்தை இரு தேசிய கட்சிகளும் கட்டிக்கொண்டிருக்கிறார்களாம்.
இலங்கை பிரச்னை உலக பிரச்னையாகமாறி, உலகநாடுகள் தமிழர்களுக்கு ஆதரவாக மாறும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தமிழர்களின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் பா.ஜ.க. காங்கிரஸ் தலைவர்கள் இலங்கை அதிபருக்கு உதவ முன்வருகிறார்களாம். இந்திய கப்பல்படை இலங்கை, இந்திய எல்லை பகுதிகளில் காவல் அதிகரிக்க பலமுறை மன்றாடிய நிகழ்ச்சிகள் நடந்ததாகக் கூறுகிறார்கள். தமிழர்கள் அழிவதில் இருதேசிய கட்சிகளுக்கும் அதிகம் ஆர்வம் இருப்பதாக உலகத்தமிழர்கள் குறிப்பிடுகிறார்கள். மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இலங்கை அதிபரிடம் விருந்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறதாம்.
மறுபடியும் காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்திய உற்பத்தி திறனை பெருக்குவார்களா என்ற கேள்வி தொழில் அதிபர்களின் சிந்தனையில் படிந்து உள்ளது. இந்திய எல்லை பாதுகாப்பு சென்ற பா.ஜ.க., காங்கிரஸ் ஆட்சிகளின் போது வலுவான நிலையில் இருந்தது உண்மை என்கிறார்கள். தற்போதைய மத்திய அரசின் ஆட்சியில் சீனா அலட்சியமாக இந்திய எல்லையை கடந்து, தங்கி விருந்து சாப்பிட்டு சென்ற நிகழ்ச்சி நடந்துள்ளது. இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் ஒப்புக்கு கண்டித்ததை இந்திய மக்கள் அறிவார்கள் எனப்படுகிறது. இந்திய அரசின் முப்படைகளும் எதிரிக்கு பதிலடி கொடுக்க துணிந்த பிறகும் அவர்களை சமாதானப்படுத்திய நிகழ்ச்சிகள் நடந்ததாக இந்திய ராணுவம் குமுறுகிறது. காரணம் வலுவிழந்த தரக்குறைவான போர்ப்படை கருவிகளை வாங்கி குவித்ததில் பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் பயனடைந்து உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்திய பாதுகாப்பை தங்கள் சுயநலத்திற்காக பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் அரசியல்வாதிகள் வலுவிழந்து வைத்து இருப்பதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தள்ளதாக கூறுகிறார்கள்.
மொத்தத்தில் இரு தேசிய கட்சிகளும் தற்போது நிர்வாகத்திறன் குறைந்த நிலையில்தான் உள்ளன. பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு, அடுத்த ஆட்சியின்போது தயாராக வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்திய பாதுகாப்பை அதிகரிக்க ராணுவ வல்லுநர்கள் உடனடியாக தயார் நிலையில் இருக்கவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இலங்கை பிரச்னை ஒரு தமிழனால்தான் தீர்க்கமுடியும் என்பது சுட்டெரிக்கும் உண்மை. தமிழக பச்சை தமிழச்சி 40 இடங்களை பெற தமிழக மக்கள் ஒன்றிணைந்து தமிழ் உணர்வுடன் செயல்படுவது அவசியம் என்று உலகத்தமிழர்கள் மற்றும் உலகநாடுகளின் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.