உலக நாடுகளிலிருந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் பரவியது கொடிய நோயான கொரோனா. 2020ம் ஆண்டிலிருந்து இன்று வரை இதன் பாதிப்பால் பெருமளவில் பொருளாதாரத்திலும், உயிரிழப்பையும் சந்தித்திருக்கிறோம்.
இந்த ஆண்டில் தொடக்கத்தில் இருந்து குறைந்து வந்த கொரொனா இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் இனி தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் வாரத்தில் நடத்தப்பட்டு வந்த கொரொனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது. தேவைப்பட்டால் அந்தந்த பகுதிகளில் நிர்வாகம் தடுப்பூசி முகாமை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.