இன்ஜினீயரிங் படித்துக் கொண்டிருக்கும் மாணவியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னையில் வேணுகோபால் மனைவியை இழந்து, ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார். இன்ஜீனியரிங் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவியை, தொடர்ந்து காதலிப்பதாகக் கூறி தொல்லை செய்துள்ளார். இதுபற்றி, அந்த மாணவி, கோட்டூர்புரம் போலீசில் வேணுகோபால் மீது புகார் கொடுத்துள்ளார். 5 மாதங்களாக இதேபோல் அந்த நபர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சமீபத்தில், தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் கொலை செய்துவிடுவதாகக் கூறி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மாணவியின் புகாரையடுத்து, போலீசார் வேணுகோபால் மீது கொலைமிரட்டல், வன் கொடுமை ஆகிய சட்டப்பிரிவுகளின் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Related posts:
ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற காவல் நிலையங்கள்!
மறுபடியும் கேட்கிறேன்... மதுக்கடைகளை திறக்காதீர்... நிரந்தரமாக மூடுங்கள் - மருத்துவர் இராமதாசு!
ஒரே நாளில் சென்னையில் 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 12 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - அ...
பணியில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் - டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அஞ்சலி !