இன்று இரவு சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மழை!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அவ்வகையில் இன்று இரவு சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு மழை பெய்யும் 30 மாவட்டங்களின் பெயர்கள் பின் வருமாறு: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், சேலம், நீலகிரி, கோவை, திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி.