இலங்கையை சேர்ந்த இருவர் சென்னை விமான நிலையத்தில் நேற்று அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகஜன்லட்டி என்ற 43 வயது பெண் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்ல இருந்த போது விமானத்தில் பாதுகாப்பு பரிசோதனை பிரிவில் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார் அதேபோல் சென்னையிலிருந்து கொழும்பு செல்ல இருந்த ஜெயக்குமார் என்பவர் குடியுரிமை சோதனை முடித்துவிட்டு சுங்கச் சோதனை பிரிவுக்கு வந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஒரே நாளில் இலங்கையை சேர்ந்த இரண்டு பேர் சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது