இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

Filed under: தமிழகம் |

இலங்கை கடற்படையினர் மீண்டும் 8 தமிழக மீனவர்கள் கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். தற்போது மீண்டும் 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் விசைப்படகில் நேற்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகை சுற்றிவளைத்தனர். மேலும் படகில் இருந்த 8 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விசைப்படகையும் மீன்பிடிக்கும் வலையையும் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் மீனவர்களை மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.