தியேட்டர், வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜு!

Filed under: தமிழகம் |

கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதன் தாக்கத்தினால் தியேட்டர்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவை திறக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தியேட்டர், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபம் போன்றவற்றை தற்போது திறப்பதற்கும் மற்றும் தளர்வு செய்வதற்கும் அனுமதி அளிக்கப்படாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது: பொது மக்கள் அதிகமாக செல்லும் இடங்களுக்கு தளர்வு செய்தால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது கடினமாகி விடும் என அமைச்சர் தெரிவித்தார்.