உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு வேண்டுகோள்!

Filed under: உலகம் |

உலக சுகாதார அமைப்பு சீனாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா குறித்த தரவுகளை பகிறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

உலக நாடுகள் பலவும் சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளதால் பீதியடைந்துள்ளது. சீனா பயணிகளுக்கு உலக நாடுகள் பலவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால் சீனாவிலோ கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. சீனாவில் கொரோனா பரவல் குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் “சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் பாதிப்புகளால் உலக நாடுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை புரிந்து கொள்ள முடிகிறது. சீனாவிற்கு கொரோனா பரவலை தடுக்க தேவையான உதவிகளை, வழிகாட்டல்களை உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது. சீனா அங்கு பரவியுள்ள தொற்றுநோய் நிலைமை குறித்து விளக்க சீனா இன்னும் முன்வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.