கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளத்தால் சென்னை மட்டுமல்லாது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பெரிதாக பாதிக்கப்பட்டது. இதில் சென்னை, எர்ணாவூர் பகுதியில் மழைநீருடன் எண்ணெய் கழிவு கலந்தது. இதுகுறித்து பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அதிகாரிகள் குழு அமைத்து திங்கள் கிழமை களத்தில் ஆய்வு செய்து செவ்வாய்க்கிழமை அறிக்கையை தாக்கல் செய்ய மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாசுகட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வரும் ஆய்வு அறிக்கையை வரும் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. எண்ணெய் கழிவை தெரிந்தே, வேண்டுமென்றே மழை நீரில் கலந்து விட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் விசாரணையின் போது பதில் கூறியுள்ளது. இதற்கு பதிலளித்த பசுமை தீர்ப்பாயம், “குடியிருப்புகள், நெடுஞ்சாலைகள் முழுவதும் எண்ணெய் கழிவுகளை காண முடிகிறது” எனக் கூறியுள்ளது.