விசாகப்பட்டினம் விஷவாயு விபத்துக்கு எல்.பி.ஜி நிறுவனம் தான் பொறுப்பு – தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

Filed under: இந்தியா |

மே 7-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.பி.ஜி நிறுவனத்தின் ஆலையில் ஏற்பட்ட விஷவாயு விபத்தால் உயிரிழந்தவர்களுக்கு அந்த நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு விதித்தது.

அந்த விஷவாயு விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ‌ இந்த விபத்தை பற்றி விசாரணை நடத்திய பசுமை தீர்ப்பாயம் கடந்த 8ஆம் தேதி 50 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

பின்பு இதனை ரத்து செய்ய வேண்டும் என எல்ஜிபி நிறுவனம் கோரிக்கை வைத்தது . ஆனால், இந்த கோரிக்கையை பசுமை தீர்ப்பாயம் நிராகரித்து.

மேலும், தொகையை விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சுற்றுச்சூழலை சீரமைப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவு விதித்தது.