தற்போது ஐபிஎல் -2023, 16வது சீசன் நடைபெறுகிறது. போட்டியில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த லீக் போட்டிகளில் எல்லா அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறது.
எந்த அணி கோப்பையைக் கைப்பற்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு 200வது போட்டிகளுக்கு மேல் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி 200 போட்டிகளில், 120ல் வெற்றியும், 79 தோல்வியும், 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்று தெரியவில்லை. இவ்வாண்டுடன் தோனி ஓய்வு பெறுவார் என்ற தகவல்களும் பரவி வருகிறது. சென்னை அணியின் சி.இ.ஓ தோனி தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடுவார் என்று கூறியிருந்தார். ஓய்வு குறித்து தோனியிடம் கேட்டதற்கு, இதுபற்றி முடிவெடுக்க இன்னும் நேரம் இருக்கிறது. நிறைய ஆட்டங்கள் உள்ளன. இப்போது இபதுபற்றி கூறினால், அணியின் பயிற்சியாளருக்குத்தான் அதிக அழுத்தம் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.