நடிகை கங்கனா இந்திரா காந்தியின் வேடத்தில் இருப்பது போல் சமுக வலைதளங்களில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத் இந்திரா காந்தி வேடத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. கங்க்னா ரனாவத் சமீபத்தில் “தலைவி” படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்திருந்தார். இப்படம் ரசிர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்து அவர் இந்திரா காந்தி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதுபற்றி முன்னர் அவர் பேட்டி ஒன்றில் “நான் இந்திரா காந்தியாக நடிக்கும் ஒரு படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அரசியல் வரலாற்றுப் படமாக இருக்கும்’ எனத் கூறியிருந்தார். இந்திரா காந்தி தோற்றத்துக்கு மாற, கங்கனா தயாராகி வருகிறார். அதற்காக ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனைக் கலைஞருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.