எம்.பி. தேர்தலில் போட்டியிட சீட்; மறுத்த கங்கனா ரணாவத் – இது தான் காரணமா!

Filed under: சினிமா |

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம்தூம் படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்தார். இவர் பாலிவுட் சினிமாவில் ரூபாய்.12 கோடிக்கும் மேல் சம்பளம் பெரும் முன்னணி நடிகை. தற்போது நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலையின் நிதிக்காக குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என சமூகவலையத்தளத்தில் பாராட்டி இருந்தார். இதற்கு பல விமர்சனம் எழுந்தது. கங்கனா பாஜகவில் இணைய போகிறார் என கருத்துக்கள் பேசப்பட்டது.

இதை பற்றி கங்கனா ரணாவத் ட்விட்டரில் பதிவிட்டது; எனக்கு பாஜக கட்சியில் எம்.பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு முன்வந்தது. அதை நான் ஏற்கவில்லை. என்னுடைய தாத்தா தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளார்.எனது குடும்பம் அரசியலில் மிகவும் பிரபலமாக உள்ளது. நான் ஒரு கலைஞனாக எனது வேலையை பார்த்து வருக்கிறேன். அரசியலைப் பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை.

இதனை குறித்து நான் சிந்திக்கவில்லை. நடிப்பு மேல் தான் ஆர்வம் உள்ளது. ஆனால், என்னுடைய கருத்துகளை வெளியிடுவேன். அதை நிறுத்த மாட்டேன் என பதிவிட்டுள்ளார்.