கடந்த ஆண்டைவிட ஜிஎஸ்டி அதிக வசூல்!

Filed under: இந்தியா |

2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி கடந்த ஆண்டைவிட 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் தகவல்கள் தெரிவித்துள்ளது.

நாட்டில் 1.43 லட்சம் கோடியை ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி வசூலை எட்டியுள்ளது. மேலும் தொடர்ந்து ஆறாவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் இந்த சாதனையை படைத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து வருகிறது. இந்த கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை மத்திய நிதியமைச்சகம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

ஆனால் கடந்த ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலுடன் ஒப்பிடும் போது ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் குறைவுதான். மேலும் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ஜிஎஸ்டி வரி வசூல் 1.40 லட்சம் கோடிக்கு மேல் அதிகமாக உள்ளது, கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 20 கோடியாக இருந்த நிலையில் தற்போது அதைவிட 28 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 612 கோடி வசூலாகி உள்ளது. நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்து வருகிறது என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தான் ஒவ்வொரு மாதமும் வரிவசூல் உயர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.