நவம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரி, பல்கலைக்கழகம் திறப்பு – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்!

Filed under: இந்தியா |

நவம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் துவங்கலாம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதனை குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியது; அக்டோபர் 30ஆம் தேதிக்குள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைகளை முடிக்க வேண்டும் எனவும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதற்கு துவங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

முதல் செமஸ்டர் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி முதல் 26ஆம் தேதிக்குள் நடத்தியும் மற்றும் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படும் எனவும் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் இரண்டாம் செமஸ்டர் வகுப்புகள் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் செமஸ்டர் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் 21ஆம் தேதிக்குள் நடத்தியும் பின்பு விடுமுறை விடப்படும் என தெரிவித்துள்ளார்.