கணவன் கண் முன்னே இருசக்கர வாகனத்தில் சென்றபோது கிரைன் மீது மோதியதில் சக்கரத்தில் சிக்கி மனைவி பரிதாபமாக பலியானார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள ஆவுடைபொய்கை அருகே கேரளா வைத்தியசாலை ஒன்றில் பெட்டிக்கடை வைத்துள்ள நாச்சியப்பன் என்பவரின் மனைவி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஞ்சலகத்தில் பணிபுரிந்து வரும் வளர்மதிக்கு சிகிச்சை பார்த்து வருகின்றனர். காரைக்குடி பகுதியில் லேசான மழை பெய்து வரும் பொழுது கணவன் நாச்சியப்பன் உடன் வளர்மதி இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது மழை பெய்ததால் பொழுது தங்கம் திருமண மண்டபம் அருகே மழைக்கு ஒதுங்கி உள்ளனர். மழை நின்ற பின்பு நாச்சியப்பன் இருசக்கர வாகனத்தை எடுத்து திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வண்டியை ஏற்றும்பொழுது அப்பகுதியில் வேகமாக வந்த கிரைன் மீது இருசக்கர வாகனம் லேசாக உரசியதில் பின்னால் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தார் வளர்மதி கிரேன் சக்கரத்தில் விழுந்து கணவன் கண் முன்னே பலியானார் விபத்து குறித்து குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.