கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயா மருத்துவமனையின் இயக்குனர் சிசிக்சை பலனின்றி உயிரிழப்பு!

Filed under: சென்னை |

கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் முக்கிய பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றனர். அதில் திமுக எம்.எல்.ஏ ஜெ அன்பழகன், பிரபல பாடகர் ஏ.எல் ராகவன் ஆகியோர் அண்மையில் உயிரிழந்துள்ளனர்.

தற்போது முக்கிய பிரபலமான சரத் ரெட்டி நேற்று கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சென்னை வடபழனியில் இருக்கும் விஜயா மருத்துவமனையின் இயக்குனர் ஆவார். இவர் நாகி ரெட்டியின் மகன் விஸ்வநாத ரெட்டியின் இரண்டாவது மகன். இவருக்கு 52 வயது தான் ஆகிறது.

இவர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். சரத் ரெட்டியின் உடலை சுகாதாரத்துறையினர் அடக்கம் செய்துள்ளனர்.

இதனைப் போலவே பார்சன்ஸ் சுந்தரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நாராயணசுவாமி பாலகிருஷ்ணனும் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவர் 12 வருடமாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.