“விக்ரம்” திரைப்படம் இன்று வெளியாகி நான்கு காட்சிகள் மட்டுமே திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது சக்சஸ் மீட் கொண்டாடப்பட உள்ளது.
இத்திரைப்படம் வெற்றி என்பது உறுதி என்ற வகையில் இந்த சக்சஸ் மீட்டில் கமல்ஹாசனுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில், “உலகநாயகன் கமல்ஹாசன் சாரின் ‘விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கமல் சாரை நேரில் சந்தித்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம். கமல் சாரின் கலைப்பயணத்தில் ‘விக்ரம்’ நிச்சயம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும்’ என்று பதிவிட்டுள்ளார்.