பொறியியல் கல்லூரி மாணவி மாடியிலிருந்து கிழே விழுந்தது தற்கொலை முயற்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனியார் பொறியியல் கல்லூரியில் முதல் மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து சம்பவம் விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் நடந்துள்ளது. இதில் மாணவி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலத்த காயமடைந்த மாணவியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.