இயக்குனர் மணிரத்னத்தின் “கடல்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கவுதம் கார்த்திக்.
கவுதம் கார்த்திக் மணிரத்தினத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தாலும் வெற்றிப்படங்கள் கொடுக்க முடியாமல் போனது. அவர் தற்போது ஒரு பிரபல நடிகையை காதலிப்பதாகவும், விரைவில் அவரை மணமுடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இவருவரும் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்பு படம் ஒன்றில் நடித்தபோது காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. நடிகர் கவுதம் கார்த்திக் தற்பொது சிம்புவோடு “பத்து தல” படத்தில் நடித்து வருகிறார்.