காவலர் ஒருவர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பணியில் இருந்தபோதே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சென்னையில் நடைபெற்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக வருகிறது. மாமல்லபுரத்தில் நடைபெறும் இப்போட்டியின் தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடந்தது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவும் நேரு உள்விளையாட்டு அரங்கிலேயே நடத்தப்பட உள்ளது. இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக காவலர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.காவல் பணியில் இருந்த காவலர் செந்தில்குமார் திடீரென தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவரான செந்தில்குமார் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தவர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.