போலீசார் ஹைதராபாத்தில் கிரிக்கெட் டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் வெற்றிபெற்றது. இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்தாலும் ஆஸ்திரேலிய அணி திறமையான பேட்டிங்கால் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா அணிகளுக்கு இடையேயான 2வது போட்டி நாளை நாக்பூரில் நடைபெறவுள்ளது. 3வது டி-20 போட்டி வரும் 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்கள் டிக்கெட் எடுக்க இன்று குவிந்தனர். அப்போது, ரசிகர்கள் மீது போலீசார் தடிஅடி நடத்தினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.