கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவரும் 2 முறை முதலமைச்சராக இருந்தவருமான உம்மன் சாண்டி தொடர்ந்து 52 ஆண்டுகளாக தொடர்ந்து கேரள மாரிலத்தில் முதலமைச்சராக இருந்து வருகிறார். அவருக்குத் தொண்டை புற்று நோய் ஏற்பட்ட நிலையில், இதற்காக ஜெர்மனி நாடு சென்று சிகிச்சை பெற்றார். அதன்பின்னர், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார். நேற்று திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, நெய்யாற்றின் கரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உம்மன் சாண்டியை ஹெலிகாப்டரின் மூலமாக பெங்களூர் கொண்டு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாக கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் தெரிவித்துள்ளார்.