கொரோனா வைரஸ் எதிரான போரை 100 வயது பாட்டி வென்றார் – வைரல் வீடியோ!

Filed under: இந்தியா |

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் குணம் அடைந்து வீடு திரும்பினார் 100 வயது சாந்தாபாய் பாட்டி.

கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறப்பவர்கள் அதிகமாக முதியவர்கள் தான். ஆனால், சில நாடுகளில் 90 வயது மேல் உள்ளவர்களும் கொரோனாவை வென்று உள்ளனர். இதைப்போல் மத்தியபிரதேசம் இந்தூரைச் சேர்ந்த சாந்தாபாய் என்றால் 100 வயது பாட்டி கொரோனாவை வென்றுள்ளார்.

இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு, தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ளார். மேலும், வீடு திரும்பிய சாந்தாபாய் பாட்டியை குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் கைதட்டி வரவேற்றனர். இதன் வீடியோ வைரலாகி வருகிறது.