கோவை, ஜூன் 28
வீரபாண்டிய கட்டபொம்மனை வெள்ளையர்களிடம் காட்டிக்கொடுத்த எட்டப்பனை போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எங்கள் சி.எஸ்.ஐ. டயோசீசன் பிஷப் திமோத்தி ரவீந்தர் என்று நம்மிடத்தில் மனக்குமுறலை கொட்டுகிறார்கள் டயோசீசனில் பணி புரியும் சில நேர்மையான ஆயர்கள்.
கோவை சி.எஸ்.ஐ. டயோசீசன் அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராக இருந்து வந்த கருணாகரனை கொரோனா வைரஸ் தொற்று அத்துடன் தலைமை பேராயரின் அங்கீகார கடிதம் வரவில்லை என்ற காரணத்தைச் சொல்லி இன்று ஓய்வு பெறவிருந்த கருணாகரனை வருகிற 1/7/2020/ அன்று உங்கள் சார்ஜை கொடுங்கள் என்று பிஷப் திமோத்தி ரவீந்தர் கூறிவிட்டாராம். ஏற்கனவே, தான் ஓய்வு பெறுவதையொட்டி கடந்த ஐந்து நாட்களாக சிஎஸ்ஐ டயோசீசன் அலுவலகத்திற்கு கருணாகரன் வராமல் இருந்தாராம்.
இந்நிலையில், நம்மை சந்தித்த ஆயர் ஒருவர் சார் உள்ளதை உள்ளபடி எழுதும் நீங்கள் நான் சொல்வதையும் எழுதுங்கள்.! என்று கூறிவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார். சார்… சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் சில கேவலமான கூத்துகள் நடைபெற்று வருகிறது, எங்கள் சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் பிஷப் திமோத்தி ரவீந்தர் என்னை போன்ற பல ஆயர்களிடம் ஆளுக்கு தகுந்தவாறு அவரது வீட்டில் ஜன்னல் வழியாக பேசி அனுப்பிவிடுகிறார். இதனால் ஆயர்களுக்குள் கருத்து வேற்றுமை உருவாகிறது அத்துடன் முட்டல் மோதல் மனச்சங்கடங்கள் வருகின்றன. இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் டயோசீசனில் பல பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை என்பதால் தற்காலிக அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி உருவாக்கப்பட்டு அதற்கு தலைமைப் பேராயர் தர்மராஜ் ரசலம் நாடாரின் ஒப்புதலோடு கருணாகரன் என்பவரை அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
அவரும் இன்று 28/6/2020 ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில் அது தள்ளிப் போய்விட்டது. கருணாகரனுக்கு பதிலாக புதிய அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளர் பதவிக்கு ஆயர் ராஜசேகர், ஜான் குணசீலன், உட்பட சுமார் 6 நபர்களின் பெயரை பிஷப் திமோத்தி ரவீந்தர் பரிந்துரை செய்து தலைமை பேராயருக்கு (மாடரேட்டர்) அனுப்பிவிட்டார். ஈரோடு பகுதியில் பணிபுரியும் மப்பு கேஸ் ஆயரான லிவிங்ஸ்டன், அட்டகத்தி ஆயரான வில்சன் குமார் மற்றும் சிலர் எங்கள் பெயரையும் பிஷப் பரிந்துரை செய்துள்ளார். நான் எப்படியும் அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளர் ஆகிவிடுவேன் என்று ஆளுக்கு ஒரு திசையில் வெள்ளாடுகளை போல் ஓடுகிறார்கள். இதில், மீசைக்காரர் அண்ணாச்சியும் கூட எனது பெயரையும் பிஷப் பரிந்துரை செய்து அனுப்பியுள்ளார் நானும் எப்படியாவது கமிட்டி செயலாளர் ஆகிவிடுவேன் என்று தனது மீசையை தடவி கொண்டு வருகிறார். இப்படி சவுண்ட் விடுபவர்களுக்கு பயந்து பிஷப் திமோத்தி ரவீந்தர் உனது பெயரை பரிந்துரை செய்துவிட்டேன் எல்லாம் மாடரேட்டர் கையில்தான் உள்ளது என்று கூலாக தனது வீட்டு ஜன்னல் வழியாக பதில் சொல்லி அனுப்பிவிடுகிறார்.
இதனால் என்னை போன்ற ஆயர்களுக்குள் கூச்சல் குழப்பம் நிலவுகிறது, அரசியல் கட்சிகளின் பதவிக்கான போட்டியை காட்டிலும் சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் நடக்கும் பதவி போட்டிகள் படு கேவலமாக இருக்கிறது. பிஷப் திமோத்தி ரவீந்தர் என்ன செய்வார் தெரியுமா.? தனது அலுவலகத்தில் உள்ள ஸ்டெனோகிராஃபர் என்பவரிடம் கடிதத்தில் அவர் பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள் இந்த ஆயர் பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார். பிஷப் சொன்னபடி கடிதத்தை டைப் செய்து ஸ்டெனோகிராஃபர் கொண்டு வந்து மேஜையில் வைப்பார். அப்போது பிஷப் பால்ராஜ் இதை காப்பி எடுத்துக் கொண்டுவா என்று கூறுவார். உடனே அலுவலக ஊழியரான பால்ராஜ் அந்த கடிதத்தை தனது செல்போனில் படம்பிடித்து கடிதத்தில் உள்ள ஆயர்களின் அலைபேசிக்கு அனுப்பிவிட்டு ஐயா எனது அக்கவுண்டில் 500 ரூபாய் போட்டு விடுங்கள் என்று கூறுவாராம். ஸ்டெனோகிராபர் அலுவலகத்திலிருந்து சென்றவுடன் அவர் டைப் செய்த கடிதத்தை திருத்தம் செய்து மறுபடியும் புதிய கடிதம் தயார் செய்து வேறு ஒரு நபர் மூலம் அந்த கடிதத்தை மாடரேட்டருக்கு அனுப்புவாராம். அத்துடன் மாடரேட்டருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சனை இல்லாத நபர் ஆகையால் நான் பரிந்துரை செய்த கடிதத்தில் இந்தப் பெயரை டிக் செய்து கடிதம் அனுப்பும்படி கூறுவாராம்.
கோவை சி.எஸ்.ஐ. டயோசீசன் பிஷப் திமோத்தி ரவீந்தரின் தில்லுமுல்லுகளை கண்டுபிடித்த தலைமை பேராயர் சமீபகாலமாக பிஷப் திமோத்தி ரவீந்தரின் நடவடிக்கைகளை சமூக இடைவெளியுடன் கண்காணித்துக் கொண்டு வருகிறாராம். கடந்த கட்டுரையில் நாம் புதிய அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராக டேவிட் பர்ணபாஸ் என்பவரை பிஷப் திமோத்தி ரவீந்தர் நியமனம் செய்யப் போகிறார் என்பதை வெளிப்படையாக குறிப்பிட்ட காரணத்தினால் என்ன செய்வது யார்.? இந்த தகவலை கூறினார்கள் என்று ஆழ்ந்த யோசனையில் உள்ளாராம் பிஷப் திமோத்தி என்று நம்மிடத்தில் மேற்படி தகவலை கூறுகிறார் ஜீசஸ்க்கு பயந்து தேவாலயத்தில் ஊழியம் செய்து வரும் ஆயர் ஒருவர்.
நாம் கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள சி.எஸ்.ஐ. டயோசீசன் வட்டாரத்தில் இறங்கி விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் நமக்கு கிடைத்தன, சி.எஸ்.ஐ டயோசீசன் அலுவலகத்தில் எடுபிடியாக மற்றும் உதவியாளராக பணிபுரியும் பால்ராஜ் என்பவர் இயேசு கிறிஸ்துவைப் போல் திருமண்டல அலுவலகத்தில் பல அற்புதங்களையும் பல அதிசயங்களையும் செய்து வருகிறாராம். எப்படி.? இந்த பால்ராஜ் என்பவர் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர், கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் நிரந்தர ஊழியராக இருந்து வருகிறார். டயோசீசன் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காக நீதிமன்றத்திற்கு சென்று வருவாராம். அத்துடன் பிஷப் சொல்லும் பல எடுபிடி வேலைகளை செய்து வருகிறாராம். ஒரு சில வருடங்களுக்கு முன்பு டயோசீசன் வழக்கு சம்பந்தமாக சில ஆவண கட்டுகளை அலுவலகத்தில் தேடியபோது அந்த ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாம். அந்த ஆவண கட்டுகளை திருப்பூர் பவுல் சர்ச் ஊழல் வழக்கில் சிக்கிய உப்புகாரனிடம் கொடுத்துவிட்டதாக பால்ராஜ் மீது குற்றச்சாட்டு வந்தது. அப்போது நேர்மையாக பணிபுரியும் அலுவலக ஊழியர் ஒருவர் காணாமல்போன ஆவணங்களை பால்ராஜ் சுவாக செய்திருப்பதை கண்டுபிடித்து பிஷப் திமோத்தி ரவீந்திரடம் கூறினார். உடனடியாக பால்ராஜ் ஈரோட்டிற்கு இடமாறுதல் செய்யப்பட்டார், பின்பு பிஷப் காலை பிடித்து கெஞ்சி கூத்தாடி பாவமன்னிப்புக் கேட்டு மறுபடியும் கோவை சி.எஸ்.ஐ. டயோசீசன் அலுவலகத்தில் எடுபிடி வேலைக்கு வந்து சேர்ந்து விட்டாராம்.
தற்போது புதிய அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராக டேவிட் பர்ணபாஸ் வரப்போகிறார் என்ற தகவல் சி.எஸ்.ஐ. டயோசீசனில் வெளிப்படையாக கசிந்து விட்டதால் பல சித்து விளையாட்டில் இறங்கிவிட்டார் பிஷப் திமோத்தி ரவீந்தர். டேவிட் பர்னபாஸ் என்பவரை மாற்றுவதற்கு 99% வாய்ப்பில்லை இருந்தாலும் அந்த ஒரு சதவீதத்தில் மாற்றுவதற்கு வாய்ப்புள்ளதாக சில ஆயர்கள் மேற்படி தகவலை நம்மிடத்தில் கூறுகிறார்கள். திருநெல்வேலி டயோசீசனில் பொருளாளர் பதவிக்கு ஏகப்பட்ட சண்டைகள் சச்சரவுகள் இருந்த நேரத்தில் சி.எஸ்.ஐ. தலைமை பேராயர் தர்மராஜ் ரசலம் நாடார் சரியான முடிவெடுத்து தனது நம்பிக்கைக்குரிய நபரான பிரவீன் என்பவரை பொருளாளராக நியமனம் செய்து அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதைப்போல் கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் தற்காலிக அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி புதிய செயலாளர் பதவிக்கு தகுதியான நபரை தேர்வு செய்வார் என்று நேர்மையாக பணிபுரியும் சில ஆயர்கள் நம்மிடத்தில் மேற்படி தகவலை கூறுகிறார்கள். உங்கள் இருதயம் கலங்காமல் இருப்பதாக ஆமென்