பிரபல பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகிறார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர்.
இவர் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார். இருப்பினும் சாராவுக்கு நடிப்பில் அதிக ஆர்வம் உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அவரது சமூகவலைதளப பக்கங்களில் சினிமாவை மையப்படுத்திய சுயவிவரங்கள் இருக்கின்றன. எனவே, 2021ம் ஆண்டு சாரா மாடலிங்கில் நுழையும்போது, அவர் சினிமாவில் நடிப்பார் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
தற்போது அவர் விரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிரபல நடிகர் ஷாகித் கபூருக்கு ஜோடியாக சாரா டெண்டுல்கர் ஹீரோயினாக அறிமுகமகலாம் என உறுதிப்படுத்தாத வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.