சிஎஸ்கே நிர்வாகம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போது, போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக முந்தைய நாள் இரவிலிருந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. டிக்கெட்டுகளை ஏற்கனவே தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கி அதிக விலைக்கு பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இரண்டு பிளே ஆப் போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் இரண்டு பிளே ஆப் போட்டிகள் நடைபெற உள்ளன.
Related posts:
சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி 1 கிலோ தங்கம் பிடிபட்டது !!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
இன்று உடன் சென்னைக்கு 381 வயது; வந்தோரை வாழ வைக்கும் - முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை அடியொற்றியது போலத் தயாரிக்கப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கை!



