“வெந்து தணிந்தது காடு” என்ற திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தில் சிம்பு நடிக்க, சித்தி இதானி ஜோடியாக நடித்துள்ளார். ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் போன்றோரும் நடித்துள்ளனர்.
அஜித் விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்களே திரையரங்குகளில் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸாகி வருகின்றன. இந்நிலையில் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன 20 நாட்களில் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய அமேசான் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.