சீனாவில் சாலை விபத்தில் 16 பேர் பலி!

Filed under: உலகம் |

சீனாவின் நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 16 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் தெற்கு பகுதிலுள்ளஹூனான் மாகாணத்தின் தலைநகர் சாங்க்காவிலுள்ள நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் மாலை, பல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராத வகையில், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இதில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதுடன், புகை மண்டலம் ஆகக் காட்சியளித்தது. இந்தக் கொடூர விபத்தில் 16 பேர் பலியானதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.