சீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; இரண்டாவது அலையின் துவங்கமா!

Filed under: உலகம் |

சீனாவில் புதியதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என சீனா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலகமே பெரும் பாதிப்பில் இருந்து வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தினால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் புதியதாக 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளார். அதில் நான்கு பேர் சிச்சுவான் பகுதியும், இரண்டு பேர் ஷாங்காய்யும் மற்றும் இரண்டு பேர் புஜியானையும் சேர்ந்தவர்கள் என சீனாவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், சீனாவில் இது வரை 85,214 பேர் பாதிக்கப்ட்டுள்ளனார், 4,634 பேர் உயிரிழந்துள்ளனர் என சீனா சுகாதாரத்துறை கூறியுள்ளது.