தமிழக சுகாதாரத்துறை செயலாளார் சுகன்தீப் சிங் பேடி தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், “புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7:30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும். மேலும், புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தைத் தவிர்க்க வேண்டும், உள் நோயாளிகள் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். மேலும், மருத்துவமனையில் மருத்துவர்கள் உரிய நேரத்தை கட்டாயமாகக் கடைப்பிடிப்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.