இந்துக்களின் நெடுநாளைய கனவு நனவாகியது – துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் ட்வீட்!

Filed under: தமிழகம் |

அயோத்தியில் உள்ள ராமர் கோவில் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று 40 கிலோ வெள்ளி செங்கலை நாட்டுகிறார்.

இதற்காக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவருடைய பதிவில் அவர் குறிப்பிட்டது: இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறும் வண்ணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க “அயோத்தியில் இராமர் கோவில்” கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து, அடிக்கல் நாட்டவுள்ள மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.