சுனிதா வில்லியம்ஸ் திரும்பி வர 6 மாதம் ஆகுமா?

Filed under: உலகம் |

பூமிக்கு விண்வெளியிலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இரண்டு விண்வெளி வீரர்கள் திரும்ப இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஸ் வில்மோர் இருவரும் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் விண்வெளி மையத்துக்கு சென்றனர். திட்டமிட்டபடி அவர்கள் அதே மாதம் 22ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் விண்வெளி களத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. 50 நாட்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கி உள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி வர இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் இருவரையும் பூமிக்கு அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்ப இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்பதை எடுத்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு முன் கடந்த 1990ம் ஆண்டு ரஷ்ய விண்வெளி வீரர் ஒருவர் 437 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தார் என்ற நிலையில் சுனிதா வில்லியம்ஸ் அவர்களும் சுமார்8 மாதங்கள் விண்வெளியில் தங்கவுள்ளார்.