அமெரிக்கா ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி – சோகத்தில் ரசிகர்கள்!

Filed under: விளையாட்டு |

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியைத் தழுவினார். இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த அரையிறுதிப் போட்டியில் உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய செரினா வில்லியம்ஸ் முதல் செட்டில் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதை அடுத்து அதிரடியாக விளையாடிய அஸரென்கா அடுத்தடுத்து இரண்டு செட்களையும் 6-3, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். அஸரென்கா அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதி போட்டிக்கு மூன்றாவது முறையாக முன்னேறி உள்ளார். மேலும், இறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன் நயோமி ஒசாகாவை எதிர் கொள்கிறார்.