இருபது நிமிடத்தில் கொரோனா தொற்று பரிசோதனை – ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு!

Filed under: உலகம் |

இருபது நிமிடத்தில் கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தும் பரிசோதனையை ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் இருக்கும் Monash பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மனிதனின் ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களின் செயல்பாட்டை கொண்டு கொரோனா வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தும் பரிசோதனையை கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு துளி ரத்தத்தை வைத்து செய்யப்படும் இந்த பரிசோதனை மூலம், யாருக்காவது கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதனை மட்டுமில்லாமல், முன்பு அந்த நபர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்த நபரா என்பது பற்றியும் கண்டுபிடிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.