ஒமார் அல் பஷீரின் கீழான ராணுவ ஆட்சி சூடான் நாட்டில் நடந்து வருகிறது. ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ளதால் இந்தியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ராணுவத்தினரிடையே அங்கும் மோதல் நிகழ்ந்துள்ளது. ஆர்.எஸ்.எப் என்ற துணை ராணுவ படைகளை ராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தக்லா மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல் பர்ஹான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இம்மோதல் சம்பவம் போராக வெடித்துள்ளது. சூடான் துணை ராணுவ படையினரின் முகாமை சூடான் ராணுவத்தினர் தாக்கி வருகின்றனர். துணை ராணுவத்தினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சூடானில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. மத்திய ராணுவத்தை அடித்து நொறுக்கிய துணை ராணுவம் சூடான் விமான நிலையம், அதிபர் மாளிகை உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பதற்றமான சூழலில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் சூடானில் வாழும் இந்தியர்களை எச்சரித்துள்ளது. வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.