சீனாவில் மீண்டும் பரவ தொடங்கும் கொரோனா வைரஸ் – பதட்டத்தில் மக்கள்!

Filed under: உலகம் |

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த 5 பேர் மற்றும் பெய்ஜிங்கை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 11 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த தகவலை அந்நாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது. தற்போது பெய்ஜிங்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் ஜின்ஃபாடி விவசாய பொருட்கள் வாங்க சென்றதால் முழு சந்தையும் தற்காலிகமாக மூடப்பட்டது.

மேலும், ஃபெங்டாயில் மீன் வாங்கும் உணவு சந்தையும் முடியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. பின்னர் பெய்ஜிங்கில் இருக்கும் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு துவங்க இருந்த வகுப்புகள் நிறுத்தப்பட்டது.