சூரி படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

நடிகர் சூரி தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். இவர் வெற்றிமாறனின் “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். அத்திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சூரி “விடுதலை 2” மற்றும் “கொட்டுக்காளி” ஆகிய படங்களை முடித்துள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் “கருடன்” படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் நடித்துள்ளனர். படத்துக்கு “கருடன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகிக் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. முதலாளிகள் போல உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் உட்கார்ந்திருக்க, அவர்களின் விஸ்வாசமான வேலைக்காரனாக சூரி அவர்களின் பின்னணியில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த படம் மார்ச் மாதத்தில் ரிலீசாகும் என கூறப்பட்டது. இப்போது படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சூரி தொடங்கியுள்ளார். இது சம்மந்தமான வீடியோ அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.