இன்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடந்தது. அவரது தரப்பில் என்.ஆர். இளங்கோ என்ற வழக்கறிஞரும் அமலாக்கத்துறை தரப்பிலும் வாதங்கள் செய்யப்பட்டன.
இவ்வழக்கை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் வாதாடிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ கூறியதாவது, “2014&-15 நடந்த குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது, திமுக ஆட்சிக்கு வந்த பின் அமலாக்கப் பிரிவு இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. அதன் பிறகே செந்தில் பாலாஜிக்கு அமலாக்கப்பிரிவு 5 முறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி செந்தில்பாலாஜி சார்பில் ஆடிட்டர் நான்கு முறை ஆஜராகி விளக்கமளித்தார். அதன் பின் ஒரு நாள் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். கடந்த ஜூன் 14ல், செந்தில்பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதே அமலாக்கப்பிரிவு தான். அவருக்கு போலியான அறுவை சிகிச்சை என எப்படி கூற முடியும்? அறுவை சிகிச்சைக்கு பின் அவரை விசாரிப்பது முறையல்ல என்ற அமலாக்கப் பிரிவின் முடிவுக்கு நன்றி’ என்று வாதாடினார்.