கோழிக்கோடு, மூணாறு விபத்துக்கு பா.ஜ.க தலைவர் எல். முருகன் ஆழ்ந்த இரங்கல்!

Filed under: சென்னை |

கோழிக்கோடு, மூணாறு விபத்துகள் துயரத்தை தந்துள்ளது என தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

இதை குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் விபத்தில் சிக்கி, விமானி உள்பட 19 பேர் பலியான சம்பவம் மிகுந்த துயரம் எற்படுத்தியுள்ளது. பல்வேறு கனவுகளோடு தாய் மண் திரும்பியவர்கள், உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது.

100க்கும் மேற்பட்டோர் பலத்த ஆழ்ந்த காயமடைந்துள்ளனர். இறந்துள்ளவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையாக குணமடைந்திட இறைவனை பிரார்த்னை செய்கிறேன்.

அதே போன்று பலத்த மழையின் காரணமாக மூணாறு பகுதிகளில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும். உறவினர்களுக்கும் ஆழ்ந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல். முருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.