சென்னை பாரி முனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.
பழமையான கட்டடம் சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ளது. இக்கட்டத்தை சீரமைக்கும் பணி நடந்து வந்ததுள்ளது. இன்று அக்கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்ப பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிப்பாடுகளுக்கு இடையில் நான்கு பேர் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னையின் பிசியான பகுதியான பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.