அவ்வப்போது சில வசதிகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு அறிவித்து வருகிறது. தற்போது போன்பே செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.
மும்பை, டில்லி ஆகிய நகரங்களில் ஏற்கனவே போன்பே செயலி மூலம் ரீசார்ஜ் கூப்பன் எடுக்கும் வசதி உள்ளது. இதையடுத்து தற்போது சென்னையில் போன்பே செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போன்பே செயலியில் சென்னை மெட்ரோ ரீசார்ஜ் கூப்பன் உள்ளதாகவும் இதை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு முன் பதிவில் அதிகபட்சமாக ஆறு டிக்கெட்டுகளை மட்டும் முன்பதிவு செய்ய முடியும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வசதி பயணிகளுக்கு மிகப்பெரிய அளவில் பயனை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.