சென்னையில் கொரோனா தடுப்பு வேலைக்காக ரூ.400 கோடி செலவு – ஆணையர் பிரகாஷ்!

Filed under: சென்னை |

சென்னையில் கொரோனா தடுப்பு வேலைக்காக ரூபாய்.400கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறிது: சென்னையில் கொரோனா தடுப்பு வேலைக்காக ரூபாய்.400கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த 400 கோடியில் கொரோனா பரிசோதனைக்கு ரூபாய்.200 கோடியும் மற்றும் களப்பணியாளர்களுக்கு உணவு கொடுப்பதற்கு ரூபாய்.30கோடியும் செலவாகி உள்ளது.

சென்னையில் 90 சதவீத மக்கள் தான் முக கவசம் அணிந்து வருகின்றனர். ஆனால், அனைத்து மக்களும் முக கவசம் அணியவேண்டும் என்பது மாநகராட்சியின் வேண்டுகோள்.

சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 83,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 67,077 பேர் குணமடைந்துள்ளனர். 1,376 பேர் பலியாகியுள்ளார்.

இன்னும் 14, 979 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 58.34 சதவீதம் ஆண்களும் மற்றும் 41. 66 சதவீத பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.