சோனியா காந்திக்கு கொரொனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் செல்வாக்கு பெற்று திகழ்ந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்போது முக்கிய தலைவர்கள் வெவ்வேறு கட்சிக்கு தாவி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தோற்றது. அதுமட்டுமில்லாமல், நான்கு மாநிலத் தேர்தலிலும் அது தோல்வியைத் தழுவியது. இக்கட்சியில் சமீபத்தில் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியை சீரமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தொற்று உறுதியான நிலையில் அவர் வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.