உத்திர பிரதேசத்தில் பேருந்து விபத்து; மூன்று பேர் உயிரிழப்பு, ஐந்து பேர் படுகாயம் – யோகி ஆதித்யநாத் இரங்கல்!

Filed under: இந்தியா |

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பேருந்து விபத்தில் ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் அவருடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துகள் துவங்கியுள்ளது.

https://twitter.com/ANINewsUP/status/1314759465183264768

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் இருந்து டெல்லிக்கு ஒரு பேருந்து சென்று உள்ளது. அந்த பேருந்தில் 45 பயணிகள் பயணித்துள்ளனர். இந்த பேருந்து அலிகார் மாவட்டம் சென்றிருந்த போது திடீரென்று விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதை பற்றி அறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார் அவருடைய இரங்கலை தெரிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.