கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசப்பாதை தோற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து அவர் படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி தனது தாயாரை பார்ப்பதற்காக டில்லி திரும்பினார். தனது தாயாரின் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் பிரியங்கா காந்தி அவருடைய தாயாருடன் மருத்துவமனையில் தங்கி இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.