சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் மீண்டும் பணி நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன் வரிசையில் தற்போது சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் பிரிவில் உள்ள 900 பேர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல முன்னணி நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பணி நீக்க நடவடிக்கையை எடுத்தது. அதனால் ஆயிரம் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தற்போது அமேசான் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் மீண்டும் பணி நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது. இசைத்துறையின் முன்னணி நிறுவனமான சோனி நிறுவனமும் இந்த நடவடிக்கையை தற்போது எடுக்க உள்ளது. கேமிங் பிரிவு ஊழியர்கள் எட்டு சதவீதம் பேர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள சோனி நிறுவனம் அதனை அடுத்து ப்ளே ஸ்டேஷன் தயாரிக்கும் பிரிவில் சுமார் 900 பேர் பேர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது