ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த 24 பெண்கள் சென்னையில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 24 பேர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.