மக்களுக்கு ஜப்பான் கொடுத்த எச்சரிக்கையால் மக்களிடம் பரபரப்பபு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் மீது வடகொரியா போர் தொடரும் ஆபத்து உள்ளதாக நாட்டு மக்களை ஜப்பான் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகொரியா முன்பு இல்லாத வகையில் தற்போது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில் 30க்கும் அதிகமான ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியா கடந்த 10 நாட்களுக்குள் 5 முறை பாலிஸ்டிக் உள்ளிட்ட அபாயகரமான ஏவுகணைகளை சோதனை நடத்தியுள்ளது. இதனால் அண்டை நாடான ஜப்பான் மீது வடகொரியா போர் தொடுக்கும் அபாயமுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்புகளுக்கிடையே ஜப்பானின் வடக்கு பகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு ஜப்பான் அரசு எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் அபாயம் காரணமாக ஜப்பானில் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவல் உலக நாடுகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.