ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே பதவியை ராஜினாமா செய்தார் என தகவல்!

Filed under: உலகம் |

உடல்நிலை காரணத்தினால் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே அவருடைய பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2006 ஆம் ஆண்டு முதல் முதலில் பிரதமராக பதவி ஏற்றார். அதன் பின்பு 2007 ஆம் ஆண்டு உடல்நிலை காரணத்தினால் ராஜினாமா செய்தார். இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்று எட்டு வருடங்கள் பிரதமர் ஆக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் ஷின்ஷோ அபே இரண்டுமுறை மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வந்ததால் அவரின் உடல் நிலை பற்றி பல தகவல்கள் வெளியாகியது. இதனால் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ஜப்பான் நாட்டின் செய்தி ஊடங்கள் தகவலை தெரிவித்துள்ளது.